நீண்ட கா லமாக கனடாவில் வாழ்ந்த வண்ணம் வர்த்தகத்துறையில் கால் பதித்து அதில் ஒரு வெற்றியாளனாகத் திகழுவதோடு மாத்திரமன்றி. தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் நன்மை பயக்கும் செயற்பாடுகளுக்கு தனது ஆதரவை தொடர்ச்சியாக வழங்கிவரும் தணிநாயகம் சண்முகநாதன் அவர்கள் இங்கு காணப்படும் வாழ்த்துக் கவிதையை தான் கற்ற தாயகப் பாடசாலைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் வகையில் பிரசுரம் செய்துள்ளார்.
தனக்கு கல்விச் செல்வத்தை அள்ளித் தந்த தாயான புங்குடுதீவு ஶ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் ஸ்தாபிக்கப்பெற்று நூறு ஆண்டை அடைவதை முன்னிட்டு 05-08-2026 அன்று பாடசாலை வளாகத்தில் பெரு விழாவொன்றை பாடசாலை பழைய மாணவர்கள் நடத்துகின்றார்கள்.
அந்த வரலாற்றுப் புகழ்மிக்க கொண்டாட்டத்திற்கு கனடாவிலிருந்து வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவிக்கும் பழைய மாணவர் தணிநாயகம் அவர்கள் கனடா வாழ் தமிழ் மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது-