கவி நாயகர் கந்தவனம் கனடாவில் இறைபதம் அடைந்த வேளை இயற்றிய இரங்கற்பா

Share

நாளும் பொழுதும் நம்மோடு நெருங்கிப் பழகி
நல்ல பல கவிதைகளை நமக் கீந்த கவிக் கோமான்
வீழ்ந்தாலும் வாழ்வார் எம்முடனே எந்நாளும்
வீரிய அவர் கவிகள் இம்மண்ணில் வாழும் வரை
தோளோடு தோள் நின்று தொண்டுகள் பல வாற்றி
கவி வாளோடு போராடி நூல்கள் பல தந்து
மாளாத புகழை மண் மீது நிலை நாட்டி
மறைந்தீரே ஐயா உம்மை நாம் மறக்க முடியாது
எண்பதுக்கும் மேலான ஏற்றமுறு நூல் தந்தீர்
இன்பமாய் வாழ்ந்து இலக்கணமாய்ப் போனீர்
பண்பும் பாசமும் பலருக்கும் வாரி வழங்கிவிட்டு
பேசாமல் பாடாமல் எங்கு சென்றீர் ஐயா
கண்ணை இமை காப்பது போல் காத்தீரே
காலாண்டு கடந்தும் எழுத்தாளர் இணையத்தை
கண் துஞ்சாக் கவிஞர் பலரைக் கனடாவில் உருவாக்கி
கண்கலங்க விட்டு விண்ணுலகஞ் சென்றீரோ
அன்னாரின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும்,
சுற்றத்தாருக்கும் .நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

சின்னையா சிவனேசன் ரொறன்ரோ , கனடா
11-03-2024

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>