கவுதமாலா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு

Share

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கவுதமாலா. இந்நாட்டின் சொலோலா நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மை நிலவியுள்ளது. அப்போது, சாலையோர பள்ளத்தாக்கில் பேருந்து கவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>