கவின், அனுபமா தாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற டாடா படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர் தற்போது நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். தீனா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் கார்த்திக்-இன் 19-ஆவது திரைப்படம் ஆகும். பலக்கட்டங்களாக நடைபெற்று வரும் இந்தப் படத்தின் தலைப்பு முன்னோட்டம் வருகிற மார்ச் 6-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான பதாகையில் பச்சை மற்றும் நீல நிற கொடியின் மீது கவுதம் ராம் கார்த்திக் 19 என்பதை குறிக்கு்ம வகையில், “ஜிஆர்கே #19” என குறிப்பிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் மற்றும் டாடா இயக்குநரின் புதிய கூட்டணியுடன் இந்தப் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தலைப்பு முன்னோட்டத்தைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பதிவேற்றங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவுதம் ராம் கார்த்திக் நடித்த படத்தின் புதிய பதிவேற்றம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>