பு.கஜிந்தன்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய பலர் கைது!
இன்றையதினம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டின் கீழ் 22பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது திருடப்பட்ட இரும்புகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த தொழிற்சாலையில் இரும்பு திருடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்து கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>