நடராசா லோகதயாளன்.
காங்கேசன்துறைக்கும நாகபட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையே மீண்டும் இம் மாதம் 15 ஆம் திகதி தொடங்கப்படவுள்ளது.
காங்கேசன்துறை நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 13-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு அதே மாதம் 23-ம் திகதியுடன் நிறுத்தப்பட்டது.
நிறுத்தப்பட்ட கப்பல் சேவை இந்த ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதியில் இருந்து பயணிகள் கப்பல் இடம்பெறும் என அறிவிப்பு வெளியிட்டப்பட்டபோதும் அது தடைப்பட்டது.
இந்த நிலையிலேயே இக் கப்பல் சேவை எதிர் வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கான கப்பல் 06-08-2024 தினம் நாகபட்டினம் துறைமுகத்தை வந்தடைந்து, கப்பலின் வெள்ளோட்டம் 2024-08-08 அன்று இடம்பெறவுள்ளது.
இதேநேரம் தற்போது யாழ்ப்பாணம் சென்னை இடையே தினமும் ஒரு தடவை இடம்பெறும் விமான சேவை செப்ரெம்பர் முதலாம் திகதியில் இருந்து இரு விமான சேவையாக இடம்பெறவுள்ளது. மாலையில் இடம்பெறவுள்ள விமான சேவையை இன்டிகோ நிறுவனம் வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.