காங்கோவில் எபோலாவுக்கு பலி எண்ணிக்கை 4,018 ஆக அதிகரித்துள்ளது. காங்கோவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் வரலாறு காணாத வகையில் எபோலா பாதிப்பு பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மே மாத மத்தியில் பரவ தொடங்கி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2014-2016 ஆண்டுகளில் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் நாடுகளில், மேற்கு ஆப்பிரிக்க எபோலா பரவலின்போது, 28,600 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, ஏற்பட்ட 2-வது கொடிய பரவலாக தற்போது காணப்படும் வைரசின் பரவல் உள்ளது. 7 மாகாணங்களில் பரவி 8,300 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 4,018 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அரசு தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து உள்ளனர். தொடர்ந்து கிழக்கு காங்கோவில் விரைவாக பரவி வருகிறது.
காங்கோவில் எபோலாவுக்கு பலி எண்ணிக்கை 4,018 ஆக அதிகரித்துள்ளது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>