காங்கோ சுரங்கத்தில் மீண்டும் விபத்து: 200 பேர் உயிரிழப்பு

Share

கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சட்டவிரோத சுரங்கங்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வழக்கம். குறிப்பாக ருபாயா நகரில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளகோல்டான் கனிம சுரங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் மீண்டும் அதே சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுரங்கத்திற்கு அருகே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் சிக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>