காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்தி யாழில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற”நீதிக்கான நீள் பயணம்” சர்வதேச மாநாடு

Share

ந.லோகதயாளன்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் மாபெரும் சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் 30-08-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் . தந்தை செல்வா கலையரங்கில்
உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மாநாட்டுக்கு முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாகத் தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த பின்னரே மாநாடு ஆரம்பமானது.

வடக்கு – கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சர்வதேச இராஜதந்திரிகள், அரசியல் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>