(கனகராஜா சரவணன்)
காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில் 28 வயதுடைய கட்டிடத் தொழிலாளியான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் 29 ம் திகதி அன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி நூரானியா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் சம்பவ தினமான இன்று பிற்பகல் கட்டிட தொழிலாளி கட்டுமானப் பணியினை மேற்கொண்டு வந்த போது தூண் இடிந்து அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்