காய்ச்சலுடன் கூடிய வலிப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுவன் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்ட சிறுவன் ஒருவன் 27ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான். கொல்லன்குளம் – வீரன்குளம், மன்னார் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து நித்தியாஸ் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவனுக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்டது. பின்னர் 25ஆம் திகதி மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அன்றையதினமே குறித்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படாட்டான்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி 27ம் திகதி இரவு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>