காரைநகர் ஈழத்து சிதம்பரம் மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100வது ஆண்டு ஆரம்பவிழா!

Share

ஈழத்து சிதம்பரம் – மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100வது ஆண்டு ஆரம்பவிழா 2ம்திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது மாணிக்க வாசகரின் பக்தி பாராயணங்கள் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் மாணிக்க வாசகரின் திருவுருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் மடாலயம் பற்றிய உரையினை தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் ஆற்றினார்.

இதன்போது மாணிக்கவாசகர் மடாலயத்தின் குருக்களான ஈஸ்வரக்குருக்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சிவ பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>