கார்த்தி நடிக்கும் சர்தார் 2’ படத்தில் இடம்பெற்ற ‘கோன் வருவான்’ பாடல் வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்தார் 2’. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ‘சர்தார் 2’ படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ பாடல் சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது. ‘மயில்வீரா’ பாடலை ஆப்ரோ, வாஹீசன் ராசையா மற்றும் முகேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளையும் ஆஃப்ரோ மற்றும் வாஹீசன் ராசையா இணைந்து எழுதியுள்ளனர்.
கார்த்தி நடிக்கும் “சர்தார் 2” படத்தின் “கோன் வருவான்” பாடல் வெளியானது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>