“காவேரி விவகாரத்தை இரு மாநிலங்களும் பேசி தீர்க்க வேண்டுமென தேவகவுடா கூறியுள்ளார்

Share

காவேரி விவகாரத்தை இரு மாநிலங்களும் பேசி தீர்க்க வேண்டுமென தேவகவுடா கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா அருகே மேகதாது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில மக்களின் குடிநீர் மற்றும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் முன்மொழியப்பட்டதாக கர்நாடக அரசு கூறி வருகிறது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 4.75 டி.எம்.சி. குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதுடன், இத்திட்டத்தின் மூலம் 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கர்நாடக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா வந்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் விஜயை முன்னாள் பிரதமர் தேவகவுடா பாராட்டி பேசியுள்ளார். மக்கள் விரும்பும் தலைவராக விஜய் இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் பேராதரவை பெற்றுள்ளார். கர்நாடகாவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு நிலவும் தண்ணீர் பிரச்சினையை தமிழக தலைவர்கள் உணர்ந்துள்ளனர். காவேரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் நீண்டு கொண்டே தான் செல்லும், இதன் மூலம் நிரந்தரத் தீர்வு எட்டப்படாது. காவேரி விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களும் சுமூகமாக பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>