கிருஷ்ணா நடிக்கும் ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் பதாகை வெளியாகியது

Share

நடிகர் கிருஷ்ணா தனது 25-வது திரைப்படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல்காட்சி பதாகை தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் கிருஷ்ணா. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமான இவர், ‘வல்லினம்’, ‘யாமிருக்க பயமே’, ‘பண்டிகை’, ‘நிபுணன்’, ‘கழுகு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் தனுஷின் ‘மாரி 2’ திரைப்படத்தில் அவர் ஏற்ற அஜய் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கிருஷ்ணா தனது 25-வது திரைப்படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிந்து மாதவி நடித்துள்ள நிலையில், மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மகேந்திரராஜ் சந்தோஷ் குமார் மற்றும் கருணாநிதி வேலப்பன் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் முதல்காட்சி பதாகையை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>