கில்லியை ஓரங்கட்டும் “படையப்பா” படத்தின் வசூல்

Share

50 ஆண்டுகளாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிக திரைகளில் ‘படையப்பா’ மறு வெளியீடானது. சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இப்படத்தைக் கொண்டாடினர். சென்னை ரோகினி திரையரங்கில் ‘படையப்பா’ மறு வெளியீடை ரசிகர்களுடன் லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் கண்டுகளித்தனர். பல திரைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக இருப்பதால் மறு வெளியீடிலும் நல்ல வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் முன்பதிவில் மட்டுமே ரூ. 3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.. மேலும், வெளியான இரண்டு நாள்களிலேயே ரூ. 8 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்ற பழைய திரைப்படங்களை மறு வெளியீடு செய்யும் போக்கு அதிகரித்தாலும் சில திரைப்படங்களே மீண்டும் வெற்றி பெறுகின்றன.

விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் மறு வெளியீடில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. தற்போது, படையப்பாவுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் கில்லியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>