கிளிநொச்சியில் சீமெந்து ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு

Share

எமது செய்தியாளர்

கிளிநொச்சி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை வியாழக்கிழமை (3) தினம் முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ நிறுவனத்தினால் விரைவில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காக திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக அப் பகுதியில் ஒரு ஏக்கர் காணியை முதல் கட்டமாக பெற்று அங்கே ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அமைக்கத் திட்டமிடப்படும் சீமேந்து தொழிற்சாலை காரணமாக தமது வளம் சுரண்டப்படுவதுடன் எதிர்காலத்தில் அயல் கிராமங்களின் நிலங்களும் உவராக மாறும் நிலைமையுள்ளதோடு சுவாசம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும் எனவும் தெரிவித்தே கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு கிராமங்களைச் சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இவ்வாறு இடம்பெற்ற போராட்டமானது பொன்னாவெளி பொதுநோக்கு மண்டபத்திலிருந்து ஆரம்பித்து சீமேந்து ஆலைக்காக ரேக்கியோ நிறுவனம் ஆய்வுப்பணியை முன்னெடுத்து வரும் இடம் வரை பேரணியாக சென்றது.

ஆய்வு பணிகள் மேற்கொள்ளுகின்ற இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியாலம் வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் மத தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>