கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Share

கிளிநொச்சி உதயநகர்ப் பகுதியில் புதன் (28)அதிகாலை இடம் தெரியாதோர் மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

உதயநகரில் வசிக்கும் ஒருவர் காரில் பயணித்துக்கொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளனர். 

இதே நேரம் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணமோ அல்லது துப்பாக்கிச் சூட்டை நடாத்தியவர்களோ மாலை வரை இனம் காணப்படவில்லை என்று பொலிஸ் தரப்பு கூறுகிறது.

இதனிடையே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட முரண்பாடே இச்சூட்டுச் சம்பவத்திற்கு காரணம் எனவும் சூட்டுச் சம்பவத்திற்கு உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மை காலங்களில் வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று மக்கள் விசனமடைந்துள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சிப் பகுதியிலேயே மக்களை அச்சுறுத்தும் வகையில் இப்படியான செயல்கள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>