கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தினரால் மல்லாவியில் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

Share

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்கம் அமைப்பினரால் மல்லாவியில் இன்றைய தினம் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுள் 25 குடும்பங்களுக்கான தலா ஒரு குடும்பத்திற்கு 10000 பெறுமதியான உலருணவு பொருட்களே இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளன

கண்காணிப்பு மற்றும் மீளாய்வு உத்தியோகத்தர் தலைமையில் அனிஞ்சியன்குளம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமை சங்க இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மற்றும் முல்லைத்தீவு பெண்கள் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர் திருமதி விஜயருபன் கமலினி அவர்களும் கிராம அலுவலர் , கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>