–மட்டடக்களப்பு அரசாங்க அதிபர் ஜே. எஸ் . அருள்ராஜ்- ஆலோசனை
(கனகராசா சரவணன்)
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று 8ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று வீசும் எனவே மின்தடை ஏற்பட கூடிய வாய்ப்பு ஏற்படும் இதனை கருத்திற் கொண்டு மக்கள் தயார்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் 8ம் திகதி அன்று வியாழக்கிழமை (08-01-2026)அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
வளிமண்டல திணைக்களத்தின் ஏதிர்வு கூறலின் பிரகாரம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று 8ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதி வரையான சனிக்கிழமை வரையில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
எனவே இதன் காரணமாக இடைக்கிடையே மின்சார தடை ஏற்பட வாய்ப்புகள் காணப்படுகிறது எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்வதோடு வானிலை அறிக்கை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது