குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வடக்கு மாசிடோனியா பயணம் மேற்கொண்டார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி பயணத்தின் முதல் நாடாக குடியரசுதலைவர் முர்மு நேற்று மால்டோவா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் மயா சந்து, துணை பிரதமர் மைஹை பாப்சொய் உள்பட பலரை குடியரசு தலைவர் முர்மு சந்தித்தார். இந்நிலையில், மால்டோவா பயணத்தை நிறைவு செய்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பயணத்தின் 2வது நாடாக வடக்கு மாசிடோனியா நாட்டிற்கு சென்றுள்ளார். வடக்கு மாசிடோனியாவுக்கு சென்ற முதல் இந்திய குடியரசு தலைவர் என்ற பெருமையை முர்மு பெற்றுள்ளார். குடியரசு தலைவர் முர்மு வடக்கு மாசிடோனியா அதிபர் சில்ஜனொவ்ஸ்கா டவொகாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வடக்கு மாசிடோனியா பயணம் மேற்கொண்டார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>