குடும்ப விளக்கின் 3ம் ஆண்டு நினைவுநாள் | திரு. சத்தியசீலன் சத்தியகுமார் (குமார்)

Share

(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா)

பனிபெய்யும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த
திருமகனாம் குமார் என்னும் அழகனே
காலனவன் கவர்ந்திட்ட நேரமதில்
உன்னை வீழ்த்தும் விதிகள் எழுதப்பட்டிருந்தால்
விதிகளை வீழ்த்தும் அளவிற்கு எங்களின் பலம் போய்விட்டதே
ஞாலமதில் பிறந்திட்ட உன் புகழை நாம்
இவ் நானிலமே பயன் பெறவே நடந்தாயே
கடல் கடந்து நீ சென்று நாம் வாழ வழிவகுத்தாய்
இன்றும், என்றும் உன் நினைவு அழியாது
மனங்களில் நிறைந்தீர் மாசற்ற மனிதராய் உணர்ந்தோம்
மனதை ஈர்ந்தவராய் பாராட்டு பெற்று
பதவி உயர்வுகள் தேடி வந்தன
சினம் கொள்ளல் உம்மிடத்தில் சிறிதளவும் இல்லை
சீரான உடைகள், சிங்கார நடை, சிரித்த முகத்தோடு
செந்நிற மேனி சீக்கிரம் பொருந்திடும்
நட்பு வட்டங்கள் நடுவே சிகரமாய் இருந்தீரே
குதுகலம் நிறைந்து கொண்டாடி மகிழந்தவை இனி வருமோ
ஏங்கி நிற்க்கும் நாம் உன்பாத கமலத்தை பூசித்து வணங்குவோம்
எங்கிருந்தாலும் அனைவரையும் வாழ்த்துவாய் என்று தெரியும்

அன்னாரின் 3ம் ஆண்டு நினைவுநாள் அன்னாரின் இல்லத்தில் 07-01-2022 அன்று நடைபெற்றது.

07-01-2022 அன்று வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அகிலாண்டேச்வரி அருளகத்தில் உள்ள சிறார்கள், பெரியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

என்றும் உன் நினைவுடன் வாழும் குடும்பத்தினர்.

மனைவி, பிள்ளைகள், சகோதரிகள், மைத்துன,மைத்துனிகள், அத்தைமார், சித்திமார், சித்தப்பா. உடன்பிறவா சகோதரர்கள், மருமக்கள். பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>