காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 10வது நாளான இன்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக, குத்துச்சண்டை போட்டியில் இந்தியா இன்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இன்று 45 கிலோ முதல் 48 கிலோ வரையிலான எடைப்பிரிவில் இந்தியாவின் நீது கங்காஸ் மற்றும் இங்கிலாந்தின் டேமி ஜேட் ரெஸ்ஜ்டான் நேருக்கு நேர் மோதினர். இந்த போட்டியில் இந்தியாவின் நீது தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். அவரது சரமாரி குத்துக்களுக்கு இங்கிலாந்து வீராங்கனையால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால், போட்டியின் முடிவில் இந்திய வீராங்கனை நீது கங்காஸ் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>