குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

Share

(24-06-2023)

எம்பிலிபிட்டிய – பனாமுர – வெலிக்கடையாய பிரதேசத்தில் இன்று (24) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதன் காரணமாக அதிகாரிகள் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்..

சந்தேக நபர் மினுவாங்கொடை பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அம்பலாங்கொடையில் பிரதி அதிபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>