குளவி கொட்டுக்கு இலக்கான வயோதிப பெண்மணி யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் நேற்றையதினம் (12) காலை 6.30. மணிக்கு காரைநகர் – களபூமியில் உள்ள ஆலயத்திற்கு துப்பரவு வேலைக்காக சென்று, துப்பரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில் அவர் வலந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை வேளை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் (வயது 63) என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>