குழந்தைகள் ஆபாசப்படங்கள் விவகாரம் – எலான் மஸ்க் ஆஜராக பிரான்ஸ் நீதிமன்றம் சம்மன்

Share

எக்ஸ் வலைத்தளம் மற்றும் அதன் செயற்கை நுண்ணறிவு கருவியான குரோக் மூலம் குழந்தைகள் ஆபாசப் படங்கள் விநியோகிக்கப்பட்டது, பெண்களின் ஆபாச டீப்பேக் படங்கள் உருவாக்கப்பட்டது மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டது குறித்து பிரான்சில் உள்ள பாரீஸ் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருப்பது மற்றும் பரப்புவதில் எக்ஸ் தளம் உடந்தையாக இருந்தது என ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து எக்ஸ் தளத்தின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் முன்னாள் தலைவர் லிண்டா யாக்காரினோ ஆகியோருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் எலான் மஸ்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>