குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்

Share

 ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது கடந்த 26ம் தேதி அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொர்ந்து குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து அதிகாலை ஈரான் தாக்குதல் நடத்தியது. அதேபோல், குவைத் மீது ஈரான் அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தியது. குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>