அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். அதனை தொடர்ந்து ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். இவர் இயக்கி நடித்த ‘யூத்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது.v. பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 16ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கென் கருணாஸின் ‘யூத் படம் 16ந் தேதி ஒடிடி தளத்தில் வெளியீடு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>