கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா பதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் துருவ் சார்ஜாவின் ‘கேடி தி டெவில்’ படத்தின் ‘திற நீ எந்தன்’ பாடல் வெளியாகியுள்ளது. பாடகி ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>