கேரளாவில் பள்ளி மாணவர்களை தாக்கும் ஷிகெல்லா நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது

Share

கேரளாவில் குறிப்பிட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஷிகெல்லா நோய் தொற்றில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு தற்போது மீண்டும் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஷிகெல்லா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியின் கிணற்றில் பாக்டீரியா இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இங்கு பயிலும் 16 குழந்தைகள் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் 126-க்கும் மேற்பட்ட புதிய நோய்தொற்றுகள் பதிவாகி, நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>