ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர் நடிக்கும் ‘அங்கீகாரம்’ படம் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ளது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜே.பி. தென்பாதியான், தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மையமாகக் கொண்டு, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ‘அறம்’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், ‘அங்கீகாரம்’ திரைப்படம் வருகிற ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘அங்கீகாரம்’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை காலை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
கே.ஜே.ஆர் நடித்த “அங்கீகாரம்” படம் ஜூன் 26ம் தேதி வெளியாகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>