கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழுயைச் சூழவுள்ள பிரதேசத்தில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

Share

நடராசா லோகதயாளன்

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெற்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ள அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கும் காலம் அறிவிக்கப்படாத நிலையில் அப் பகுதியை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கும் நோக்கிலும், அப் பகுதி தொடரபில் சந்தேகம் எழுவதனை தவிர்க்கும் வகையிலுமே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது இந்த வகையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி காணும் பிரதேசத்தைச் சூழ கமரா பொருத்தும் பணி நேற்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கான பணியினை யாழ்ப்பாணத்தில்  உள்ள ஓர் கமரா பொருத்தும் வர்த்தக நிலையம் ஊடக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கொக்குத்தொடுவாயில் பணியாற்றிய அதிகாரிகளின் கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் பணியாற்றிய அதிகாரிகளிற்கான கொடுப்பனவிற்கான சிட்டைகள் தயார் செய்து வழங்கியபோதும் அதற்கான பணம் இதுவரை கிடைக்கவில்லையென மாவட்டச் செயலகம் தெரிவிப்பதனால் கொடுப்பனவுகள் தாமதமடைவதாக சுட்டக்காட்டப்படுகின்றது.

இதுதொடர்பில் மாவட்டச் செயலக அதிகாரிகளிடம தொடர்புகொண்டு இப் பணிக்கான பணத்திற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்திருந்தமை தொடர்பில் கேட்டபோது,

இந்தச் செலவிற்கான அனுமதி கிடைத்திருந்த போதும் இதற்கான தரவப் பணம் கிஐக்கவில்லை என்பதே சுட்டிக்காட்டப்பட்டது. இருந்தபோதும் மாற்று ஏற்பாடுகள் மூலம் விரைவாக இக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனப் பதிலளித்தனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>