கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வமத மாணவர்களின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைபெற்ற பொங்கல் விழா!

Share

பு.கஜிந்தன்

கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட தமிழ் இலக்கிய மன்றத்தினுடைய ஏற்பாட்டின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட பொங்கல் விழாவானது 28.01.2025 செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது.

சட்டபீட தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவர் செல்வி ஜீவிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா அவர்களும் கௌரவ விருந்தினராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் எச். டி. கருணாரத்ன அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பல்வேறு விதமான பாரம்பரிய விளையாட்டுக்கள், கலை கலாசார நிகழ்வுகளுடன் தமிழ் இலக்கிய மன்றம் ஒழுங்கு செய்த இந்நிகழ்விலே இன,மத பேதங்களுக்கு அப்பால் அனைத்து மாணவர்களும் இணைந்து செயலாற்றியிருந்தமை முன்னுதாரணமானதொரு அம்சமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>