கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற நாவலர் குருபூசை!

Share

பு.கஜிந்தன்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.12.2025 அன்று புதன் காலை 8.30 மணிக்கு நாவலர் குருபூஜை இடம்பெற்றது.

கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலாவதாக கலாசாலையில் எழுந்தருளி உள்ள நாவலர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதி பேச்சாளராக சிவத்திரு விஷ்ணுகுமார் விஷ்ணுயன் கலந்துகொண்டார்.

அதிதிக்கான அறிமுக உரையினை இந்து மன்றக் காப்பாளர் கு.பாலசண்முகன் ஆற்றினார். கலாசாலை அதிபர் நிறைவுரை ஆற்றினார்.

அதிதிப் பேச்சாளர் முகாமைத்துவ குழுவினரால் பொன்னாடை போர்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>