கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் ச.லலீசன் ஆற்றிய சொற்பொழிவு நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்குமாம்

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திடமும் விசாரணை!

பு.கஜிந்தன்

இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரும் சொற்பொழிவாளருமான ச.லலீசன், இளைஞர்களிடையே இன நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் தூண்டும் வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்று கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கல்விஅமைச்சு விசாரணை களை ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடை பெற்றிருந்தது. இதனடிப் படையில், இன நல்லிணக் கத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வை எவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தலாம் என்பது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>