சசிகுமாரின் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

Share

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தற்காலிகமாகப் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் இணைந்து சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். இணைத் தயாரிப்பில் கிரிஷ் கே. நகரேச்சா ஆகியோரும் கிரியேட்டிவ் புரொடியூசர் சஞ்சய் விஜயராகவன், ஆதரவு நிறுவனம் 6 டைமென்ஷன்ஸ் ஃபிலிம் அண்ட் மீடியா ஆகியோர் இணைந்து பணியாற்றுகின்றனர். நடிகர் சசிகுமார் அண்மையில் வெளியான ‘வதந்தி’ வெப் தொடரின் இரண்டாம் பாகத்தில் ‘எஸ்.ஐ. மூசா ராசா’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், ராஜு முருகன் இயக்கத்தில் சைத்ரா ஜே. ஆச்சார் உடன் இணைந்து நடித்துள்ள ‘மை லார்ட்’ திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபிரீடம்’ திரைப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ‘யாத்திசை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும், கன்னட இயக்குநர் யோகராஜ் பட் இயக்கத்தில் ஒரு புதிய திட்டத்திலும் சசிகுமார் மும்மரமாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>