சசிகுமாரின் “மை லார்ட்” படத்தின் 2வது பாடல் வெளியானது

Share

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன், நந்தன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் “ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இப்படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகி வைரலானது. சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோகசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மை லார்ட்’ படத்தின் டப்பிங் பணியின் போது எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘மை லார்ட்’ படத்தின் 2வது பாடலான ‘ராசாதி ராசா’ வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை, பாடகர்கள் வி.எம். மகாலிங்கம் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்தின் ‘எச காத்தா’ பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>