சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நாளை வாக்கெடுப்பு

Share

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்து, விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். சபாநாயகராக ஜே.டி.சி. பிரபாகர் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டசபையில் 13-ந் தேதிக்குள் (அதாவது நாளை) நிரூபிக்க வேண்டும் என்று ஆளுனர் அர்லேகர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். அதன்படி த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் நாளை சட்டசபையில் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பெரும்பான்மையை நிருபிப்பதில் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க உள்ளனர். இதன் மூலம் தமிழக வெற்றி கழக கூட்டணியின் பலம் 151 ஆக உயர உள்ளது. இதைபோல அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஆலோசனை நடத்தி வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>