சண்டிலிப்பாயில் உள்ள வீட்டில் திருடர்கள் கைவரிசை!

Share

பு.கஜிந்தன்

சண்டிலிப்பாயில் உள்ள வீட்டில் திருடர்கள் கைவரிசை!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீட்டில் நேற்றிரவு (07) திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த 10ஆயிரம் ரூபா பணம், 1/4 பவுண் தோடு, 1/4 பவுண் மோதிரம் மற்றும் காஸ் சிலிண்டர் ஒன்று என்பன களவாடப்பட்டுள்ளன.

அந்த வீட்டின் சமையறையானது, வீட்டிற்கு 20 மீற்றர்கள் தள்ளி அமைந்துள்ளது. சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த, மேற்படி பணம் மற்றும் பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>