சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

Share

மணி சேயோன் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. கேப்டன் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது 10-வது மைல்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இப்படத்தில் கேப்டனின் இளைய மகனான சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்த மணி சேயோன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முறைப்படி கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். தொடர்ந்து, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் போர்டை அடித்து துவங்கி வைத்தார். டாக்டர்.ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி, காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள ‘புரொடக்சன் நம்பர் 10’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் இன்றிலிருந்து அதிவேகமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மனு ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் மற்ற முக்கிய நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>