‘சத்தியவான் சாவித்திரி’ படம் நவம்பர் 20ம் தேதி வெளியாகிறது

Share

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்த ‘சத்தியவான் சாவித்திரி’ படம் நவம்பர் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வழக்கறிஞர் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர்களுடன் பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘சத்தியவான் சாவித்திரி’. பிரவீன் எஸ். விஜய் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார்.

இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து முதல்காட்சி பதாகை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 24-ந்தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ‘சத்தியவான் சாவித்திரி’ படம் நவம்பர் மாதம் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>