தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வந்த சந்தானம், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இங்க என்ன சொல்லுது, இனிமே இப்படித்தான், சக்கப்போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சந்தானம் நடிகர் சிலம்பரசனின் 49-வது படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார். கே7 ஸ்டூடியோஸ் சார்பில் விஜய் கே செல்லையா மற்றும் வீனஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் கே.ஜே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கிறார். இந்தப் படம் டைம் லூப் சார்ந்த திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் சுதமான் கிருஷ்ணா எழுதி, இயக்கும் இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இந்த நிலையில் நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>