சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

சந்தோஷ் பிரதாப், பவ்யா திரி​கா நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கும் படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தப் படத்தில் பவ்யா திரி​கா நாயகியாக நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். பூஜிதா பொன்​னா​டா, ஜெயப் பிர​காஷ், முனீஷ்​காந்த் உள்பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்தை அலர் ஸ்டூடியோஸ் சார்​பில் மலர்​விழி நடேசன், டாக்​டர் ஷிவானி சுப்​பிரமணி தயாரித்​துள்​ளனர். இப்​படத்​தின் முதல்காட்சி கடந்த பிப்ரவரியில் வெளி​யானது. “இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதா​நாயக​னுக்கு நேரும் எதிர்​பா​ராத சம்பவம்​ அவனுடைய வாழ்க்​கை​யை எப்​படி மாற்​றுகிறது என்​பது கதை” என்றது படக்குழு. இந்நிலையில், ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>