சந்நிதியான் ஆச்சிரமத்தில் தவத்திரு.முருகேசு சுவாமிகளின் 27ம் குருபூசை!

Share

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைபண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் முருகேசு சுவாமிகளின் 27 வது குருபூசை 18/03/2024 திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற குருபூசை நிகழ்வில் முதல் நிகழ்வாக ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூசை வழிபாட்டுகள் ஆரம்பமாகி சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுவாமி அவர்களின் நினைவு பேருரையுடன் கூடிய அறுபத்து மூவர் குருபூசையுடன் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், முருகேசு சுவாமிகளின் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>