சன்னி லியோன் நடித்த “கென்னடி” படம் 20ம் தேதி ஓடிடியில் வெளியீடு

Share

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கென்னடி’ திரைப்படம், வரும் 20ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகை சன்னி லியோன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி திரைப்படத்தில் நடிகர் ராகுல் பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தூக்கமின்மையால் பாதிக்கப்படும் ஒரு முன்னாள் காவலரை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால், கென்னடி படத்தை ஓடிடியில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>