சமுத்திரக்கனி நடித்த “கஸ்தூரி வீடு” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

சமுத்திரக்கனி நடித்த “கஸ்தூரி வீடு” படத்தின் முன்னோட்டம் வெளியானது. சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முக திறமையுடன் பயணித்து வருபவர். இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். நடிகராகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ‘விசாரணை’ படத்தில் காவல் அதிகாரியாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார். இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனி தற்போது ‘கஸ்தூரி வீடு’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆர். ஆனந்த் இயக்கும் இப்படம் அறிவியல் புனைகதை, திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வருகிறது. ஒரு மர்மமான வீடு, அதற்குள் மறைந்திருக்கும் பயங்கர ரகசியம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாத்தான் என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனியுடன் டேவிட் டிட்டோ, தனுஜா மதுரபந்துலா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>