சர்​வ​தேச அங்​கீ​காரம் பெற்ற “டூரிஸ்ட் பேமிலி” படம்

Share

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.

சர்​வ​தேச திரைப்பட விமர்சன தளம் லெட்​டர்​பாக்​ஸ்ட் வெளியிட்ட பட்​டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படம், 6-ம் இடத்​தை பெற்​றுள்​ளது. சர்​வ​தேச திரைப்பட விமர்சன தளம் லெட்​டர்​பாக்​ஸ்ட் . உலகம் முழு​வதும் உள்ள திரைப்பட ரசிகர்​கள், விமர்​சகர்​கள், சினிமா ஆர்​வலர்​கள் பயன்​படுத்​தும் முன்​னணி திரைப்பட விமர்சன தளம் இது. பயனர்​களின் மதிப்​பீடு​கள், விமர்​சனங்​கள், பார்வை அனுபவங்களை அடிப்​படை​யாகக் கொண்டு பல்​வேறு பிரிவு​களில் சிறந்த திரைப்​படங்​களைத் தேர்ந்​தெடுத்து ஆண்​டு​தோறும் வெளி​யிடும் இந்த தளத்தில் பொழுது​போக்கு படப் பிரி​வில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் இடம்​பெற்​றுள்​ளது. உலகளா​விய அளவில் வெளி​யாகி​யுள்ள இந்த பட்​டியலில் இடம்​பெற்​றுள்ள ஒரே தமிழ்த் திரைப்​படம் இது என்​பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>