சர்வதேச ஊடகங்கள் முள்ளிவாய்க்கள் நோக்கி ‘படையெடுப்பு’

Share

எமது மன்னார் செய்தியாளர் லம்பேர்ட்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை சர்வதேச ஊடகங்கள் அங்கு சென்று உலகெங்கும் எடுத்துச் செல்லும் ஊடக நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளன.

மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் அழிப்பு தினமாக தமிழ் மக்கள் அனைவரும் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் உயிர் துறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமான செயற்பாடாக மாறியுள்ளது.

இந்நிலையில் மே மாதம் தொடங்கியதில் இருந்து மக்களுக்கு முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதனை இம்முறை சர்வதேச ஊடகங்கள் நேரடியாக அங்கு படையெடுத்து கண்காணித்து வருகின்றன.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு அருகில் கடந்த 16-05-2024 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்க ஆயத்த வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த வேலைகளையும், முள்ளிவாய்க்கால் முக்கிய நினைவிடங்கள், தடய பொருட்களையும் சர்வதேச ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்கள் அன்றைய தினம் நேரடியாக கவனித்து தங்கள் பணிகளில் ஈடுபட்டிருப்பைக் காணலாம் .

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>