சர்வதேச நீதிகோரிய காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தனது ஆதரவை வழங்குகின்றது

Share

இனப்படுகொலையை வெளிப்படுத்தி சர்வதேச நீதிகோரும் போராட்டங்கள் சகலவற்றினையும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வரவேற்பதுடன் அவற்றிற்கு எமது ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

28ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து யாழ். நகரில் மேற்கொண்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டத்தில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

எமது இனத்தின் மீது நாட்டின் ஆட்சியாளர்களினால் திட்டமிட்ட இனப்படுகொலையே நடத்தப்பட்டது. இவ்; இனப் படுகொலையில் திட்டமிட்ட படுகொலைகள், வலிந்துகாணாமலாக்கப்பட்ட சம்பவங்கள், இடம்பெற்ற பாரதூரமான இன அடிப்படையிலான அரச பாரபட்சங்கள் என பரந்துள்ளன. இவ்வாரம் தொடர்ந்து இனப்படுகொலைக்கான நீதி கோரிய போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்றைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகள் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து இனப்படுகொலைக்கான கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளன.

அதுபோல் நாளை வடக்குக் கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை மையப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் போராட்டத்தினை நடத்தவுள்ளனர். மேலும் பல்வேறுபட்ட சிவில் அமைப்புக்களும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் பல்வேறுபட்ட முறைமைகளின் அடிப்படையில் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன. நடைமுறையில் உள்ள அரசாங்கமும் எமக்குத் தீர்வைத்தரும் என்ற நம்பிக்கை இல்லை. எது எப்படியிருந்தபோதுதும் உள்நாட்டில் இடம்பெறும் முழுமையான சர்வதேசத் தலையீடுகள் அற்ற விசாரணைகளோ தீர்வுகளோ தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான உத்திகளே.

அவ்வகையில் தான் எமது சபையில் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்ற தீர்மானத்தினை ஏகமனதாக எடுத்துள்ளோம். இந் நிலையில் எமது சபை உத்தியோகபூர்வமாகவே இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைக் கேட்டு நிற்கின்றது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>