சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

Share

(மன்னார் செய்தியாளர் எஸ்.றொசேரியன் லெம்பேட்)
(12-12-2025)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10ம் திகதி புதன்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது அன்று இடம்பெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாகைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இந்த மனித உரிமைகள் தினத்தில் எமது உறவுகள் எங்கே? எமது உறவுகளுக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அத்துடன் அரசியல் கைதிகளுக்கு விடுதலை, பௌத்தமயமாக்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததோடு சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களை புரிந்து கொண்டு தமக்கான தீர்வை பெற்றுத் தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இந்த போராட்டத்தில் ஈடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>